தருமபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகத்தில் ஊரடங்கு காரணமாக தினமும் 800-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டுவருகின்றது.
அவ்வாறு வழங்கப்படும்போது உணவு வழங்குவோரும், வாங்குவோரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுகாதார முறையில் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
அதையடுத்து அவர், பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையிலும், சுவையாக உணவு தயாரித்து அதனைச் சேவை மனப்பான்மையுடனும் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஓசூர் அம்மா உணவகத்தில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு இலவச உணவு!