ETV Bharat / state

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு - Minister for Municipal Administration, Urban and Water Supply

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் குறித்தும், குறைகள் குறித்தும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

kn neru
minis
author img

By

Published : Jul 9, 2021, 6:11 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூலை.8) ஆய்வு செய்தார்.

அதகப்பாடியில் அமைந்துள்ள ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் நிலையம், அங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குளோரின் அறை ஆகியற்றை பார்வையிட்ட அமைச்சர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஒகேனக்கல் குடிநீர் முழு அளவில், புளோரைடு தண்ணீரில் கலக்காமல் விநியோகம் செய்யப்படுகிறதா? எனக் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து பென்னாகரம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள நீர் ஏற்றும் நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு குடிநீா் சுத்திகரிப்பு மற்றும் விநியோக முறை குறித்தும் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சணாமூர்த்தி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஒய்.பிரகாஷ் (ஒசூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.