ETV Bharat / state

‘12ஆம் வகுப்பிற்கு பின் என்ன படிப்பது?’ - மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி! - dharmapuri

தருமபுரி: அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி ஆலோசனை நிகழ்ச்சியை அமைச்சர் அன்பழகன் தொடங்கிவைத்தார்.

அன்பழகன்
author img

By

Published : Sep 9, 2019, 4:34 PM IST

Updated : Sep 9, 2019, 4:44 PM IST

தருமபுரியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. ‘பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின் அடுத்து என்ன?’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.

இந்தக் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, வருமான வரித் துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு

நிறைவில் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கிவருவதாகவும், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 82 புதிய அரசுக் கல்லூரிகள், ஆயிரத்து 666 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

அமைச்சர் அன்பழகன் பேச்சு

மேலும், இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும் அமைச்சர் அன்பழகன் பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

Intro:tn_dpi_01_goverment_school_student_12th_motivation_Pro_vis_7204444Body:tn_dpi_01_goverment_school_student_12th_motivation_Pro_vis_7204444Conclusion:எட்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 82 கல்லூரிகள் 1666 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேச்சு.......

தர்மபுரியில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பன்னிரண்டாம் வகுப்பு படிப்பிற்கு பின் அடுத்து என்ன? என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி மற்றும் வருமான வரித் துறை ஆணையாளர் நந்த குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு அடுத்து என்ன படிக்கலாம் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன்.தமிழக அரசு மாணவர்கள் பள்ளிப்படிப்பை இடை நின்றலை தவிர்க்கும் வகையில் 14 வகையான பள்ளி உபகரணங்களை வழங்கி வருவதாகவும் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 82 புதிய அரசுகல்லூரிகள் மற்றும் 1666 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளது என்றும் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். இக்கல்வி ஆலோசனை நிகழ்ச்சியில் சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
Last Updated : Sep 9, 2019, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.