தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 45 அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிய தற்காலிக மருத்துவர்களுக்கான நேர்காணல் இன்று (மே.27) நடைபெற்றது. அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நேர்காணலை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், மருத்துவர்கள் கண்காணிப்பில்0 மூன்று தேர்வுக் குழுவினர் நடத்தினர்.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நடந்த நேர்காணலில் கலந்து கொள்ள மொத்தம் 120 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 45 பேருக்கு மட்டும் மருத்துவர் பணி நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர்30 மருத்துவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 மருத்துவர்களுக்கும் தவறுதலாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பணி கிடைக்காத மருத்துவர்கள் கூறுகையில், “ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கிடையே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டோம். இரவு அழைப்பு விடுத்த அலுவலர்கள், தற்போது தவறுதலாக அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நீதிமன்றம் சென்று முறையிட உள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க : கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளைத் தொடர்ந்து பச்சை பூஞ்சை....