தருமபுரி: பென்னாகரம் அடுத்த நாகமரை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவர், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (35) என்ற தனது முன்னாள் காதலியைக் கர்நாடகா மாநிலம் ஹனுர் தாலுக்க மலைக்கு அழைத்துச் சென்று கொலை செய்தார்.
இந்த சம்பவத்தை முனி ராஜ் தனது பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். அதில், “என்னை கொலைகாரனாக ஆக்கிட்டியே லட்சுமி, போயிட்டியா, அந்த ஈஸ்வரன் என்ன கொலை செய்ய அனுப்பி வைத்துவிட்டான்; நீ இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கொலை செய்ய வைச்சுட்டான்"
பாருங்க... இந்த கல்லைத் தூக்கிப் போட்டுத் தான் கொலை செய்தேன். நான் தான் கொலை செய்தேன்” என ஆவேசமாகக் கத்தி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். பின்னர், அவரும் அங்கேயே தற்கொலை செய்துக்கொண்டார்.
கொலை குறித்துத் தகவலறிந்த மலை மாதேஸ்வரா காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். லட்சுமியின் கணவா் ரமேஷ் வெளியூா் சென்றிந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் கொடூரக் கொலை.. மனித தலை உடன் சுற்றித்திரிந்த நபர் கைது..