ETV Bharat / state

"பிரிய முடியாது; பாதுகாப்பு கொடுங்க" தருமபுரி எஸ்.பி ஆபிஸில் காதல் ஜோடி தஞ்சம்!

தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி காதல் திருமணம் செய்துக்கொண்ட இளம் ஜோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

couple protest
காதல் ஜோடி தர்ணா
author img

By

Published : Apr 28, 2023, 1:37 PM IST

தருமபுரி எஸ்.பி அலுவலகம் முன்பு காதல் ஜோடி தர்ணா!

தருமபுரி: காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் பூங்கொடி தம்பதியரின் மகள் கலையரசி (23). இவர் எம்எஸ்சி படித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் வெங்கடேஷ் ஆகிய இருவரும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.

கலையரசி - வெங்கடேஷ் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கடந்த 21 ஆம் தேதி கலையரசி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் பதறி, அக்கம் பக்கம் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் கலையரசியின் பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, காரிமங்கலம் காவல்துறையினர் கலையரசியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். திடீரென காவல்துறையினர் அழைத்ததால் பதற்றத்தில் கலையரசியின் பெற்றோர் வந்து பார்த்த போது கலையரசி மற்றும் அவரது காதலன் வெங்கடேஷ் இருவரும் காவல் நிலையத்திலிருந்துள்ளனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணையின் போது, இருவரும் கடந்த ஒரு வருட காலமாகக் காதலித்து வந்ததாகவும் கடந்த 21 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது குடும்பத்தின் மூலம் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி காரிமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று பாதுகாப்பு கேட்டுள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் இருவருக்கும் பாதுகாப்பு தர முடியாது எனவும், இருவரும் பிரிந்து செல்லுங்கள் எனக் கூறி காலையிலிருந்து மாலை வரை கண்டு கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மனமுடைந்த காதல் ஜோடிகள், "எங்களால் பிரிந்து செல்ல முடியாது ஆகையால் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்" எனக் கூறி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காதல் ஜோடியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொதுமக்கள் அதை வேடிக்கை பார்க்கக் கூடினர். ஆகையால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: ஆரவாரத்துடன் வெளியானது பொன்னியின் செல்வன்-2; ரசிகர்கள் உற்சாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.