ETV Bharat / state

’எங்களுக்கு உணவு வழங்கவில்லை’ - தாமதமாகப் பணிகளைத் தொடங்கிய அலுவலர்கள் - Dharmapuri late election counting

தருமபுரி: வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசு அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் வாக்குப்பெட்டிகள் தாமதமாக திறக்கப்பட்டன.

Dharmapuri election
Local body election counting
author img

By

Published : Jan 2, 2020, 12:59 PM IST

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு காலை உணவு 10:30 மணி கடந்தும் வழங்கப்படாததால், அவர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு காலை 10:45 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை அரசு அலுவலர்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், தாங்கள் காலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்ததாகவும் காலை 10:30 மணியாகியும் தங்களுக்கான உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

உணவுக்கு முண்டியடித்துக்கொண்ட அரசு அலுவலர்கள்

இதேபோல, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில், வாக்கு எண்ணும் தேர்தல் அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் 3 மணிநேரம் தாமதமாக வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டன.

இதையும் படிக்க: ரயில்வே கட்டண உயர்வு: பயணிகள் கருத்து

Intro:தருமபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை  மையத்தில்அரசு அலுவலர்களுக்கு உணவு இல்லை

Body:தருமபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை  மையத்தில்அரசு அலுவலர்களுக்கு உணவு இல்லை

Conclusion:

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை  மையத்தில்அரசு அலுவலர்களுக்கு உணவு இல்லை. தருமபுரி அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அரசு அலுவலகம் மற்றும் ஆசிரியர்களுக்கு காலை உணவு  10.30மணிகடந்தும் உணவு வழங்கப்படாததால் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். நீண்ட வாக்குவாதத்தை பிறகு 10.45மணிக்கு  உப்புமா உணவு வழங்கப்பட்டது இதனை அரசு ஊழியர்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கி உட்கொண்டனர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் தெரிவிக்கும் போது தாங்கள் காலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வந்ததாகவும் காலை பத்து முப்பது மணி ஆகியும் தங்களுக்கான உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.