ETV Bharat / state

பள்ளி அருகே மதுபானங்கள் விற்பனை- பொதுமக்கள் சாலைமறியல்

தருமபுரி: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி அருகில் அரசு மதுபானங்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்தவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

people-protest
author img

By

Published : Apr 21, 2019, 6:14 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி அருகே அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி அருகே முனியப்பன் என்பவர் தனது வீட்டில் அரசு மதுபானங்களை வாங்கி பதுக்கி விற்பனை செய்து வருவதாகவும், இதனால் மாலை நேரங்களில் குடிமகன்கள் குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலேயே பாட்டில்களை வீசி செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது வழியாகச் செல்லும் பொதுமக்களை முகம் சுளிக்கும் வகையில் இருப்பதால், இது குறித்து பலமுறை காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி மக்கள் பாலக்கோடு- ஒகேனக்கல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தச் சாலை மறியலால் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு தகவலறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து சாலைமறியலை பொதுமக்கள் கைவிட்டனர். பின்பு முனியப்பன் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது இரண்டு மூட்டைகளில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து முனியப்பனை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பொதுமக்கள் சாலைமறியல்

அரசு பள்ளி அருகே அரசு மதுபானங்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்தவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே  நாக தாசம்பட்டி அருகே அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த பள்ளி அருகே முனியப்பன் என்பவர் வீட்டில் அரசு மதுபானங்களை வாங்கி பதுக்கி விற்பனை செய்து வருவதாகவும் இதனால் மாலை நேரங்களில் பள்ளி வளாகத்திலேயே குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்வதாகவும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாகவும் பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி மக்கள் பாலக்கோடு- ஒகேனக்கல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் பாதிப்பு தகவலறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலைகளை பொதுமக்கள் கைவிட்டனர். பின்பு முனியப்பன் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது இரண்டு மூட்டைகளில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து அந்த மதுபாண பாட்டில்களையும்  பறிமுதல் செய்து முனியப்பனை விசாரணைக்காக கூட்டிச் சென்றுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.