தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை வைரஸ் தொற்று சோதனை செய்ய பயன்படும் நடமாடும் வாகனத்தை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இந்த நடமாடும் வாகனத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு நேரடியாகக் கொண்டு சென்று, அங்குள்ள மக்களை வைரஸ் தொற்று சோதனை செய்து, அவர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய பயன்படுத்தப்பட உள்ளது. பொது மக்களை அலையவிடாமல், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பரிசோதனை செய்ய, இந்த வாகனம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் புதியதாக 44 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
இந்நிலையில் புதிய பணி நியமனம் பெற்றவா்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவா்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட சுகாதாரப் பணிகள் நல இயக்குநர் ஜெமினி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கின்போது 5 மாநகராட்சிகளில் எவை இயங்கும்? எவை இயங்காது? - அரசு வெளியீடு