தருமபுரியிலுள்ள பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல திரைப்பட நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் , தருமபுரி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய சுஜாதா, பெண்கள் தங்களது புகைப்படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிடக் கூடாது என்றும், அவ்வாறு பதிவிடப்படும் புகைப்படங்கள் தவறுதலாகச் சித்தரிக்கப்பட்டு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறினார். எனவே பெண்கள் சமூக வலைதளங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் , ”பெண்களுக்கு வரக்கூடிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் செல்போன் தான். பெண்கள் நன்றாகப் படித்து, சுய வருமானத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். திருமணத்திற்காகப் பெற்றோரை செலவு செய்ய விடக்கூடாது. அப்போதுதான் வாழ்க்கை நல்ல முறையில் அமையும்” என்றார்.
இதையும் படிங்க: 'மகளிர் தின வாழ்த்துகள்' கூறிய முதலமைச்சர் பழனிசாமி!