இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,, "தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.4.97 கோடி மதிப்பில் 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தற்போது 30 விழுக்காடு பணிகள் நிறைவுப்பெற்றுள்ளது. அன்னசாகரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை 20 நாட்களில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் தகுதியுடையவர்களுக்கு மாற்று இடம், வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த குடிமராமத்துப் பணிகளை, இப்பகுதியைச் சேர்ந்த ஆயக்கட்டுப்பகுதி விவசாயிகள் இணைந்து சங்கங்கள் தொடங்கி பதிவு செய்து பணிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்துதல், வழங்கு வாய்க்கால், உபரி நீர் வழியினை சீரமைத்தல், மதகுகள், கண்மாய்கள், கலிங்கினை சீரமைத்தல், பாசன வாய்க்காலை மேம்படுத்துதல், புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் வழங்கப்படும். எனவே விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் தேவைப்படுமாயின் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோரை அணுகி பயன்பெறலாம். குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஏரிகளின் அருகே உள்ள கிணறுகள், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
தமிழ்நாட்டில் குடிமராமத்து பணிகள் தொய்வின்றி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். மேலும் ஆக்கிரமிப்புகள் இருப்பின் வருவாய் துறையினர் ஒத்துழைப்புடன் ஏரியின் முறைப்படுத்தப்பட்ட அளவு தூர்வாரிட, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.