தருமபுரி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலில் அளித்து வருகின்றனர்.
தர்மபுரி நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்பொருட்டு, பிப்.4ஆம் தேதியான நேற்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மக்களின் ஆதரவு
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது. தர்மபுரி நகராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமோடு உள்ளனர்.
மேலும், தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட 10 பேரூராட்சிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வெற்றி வாய்ப்பு
முன்னதாக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது போல, தர்மபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலிலும் வெற்றி பெறும்.
தமிழ்நாடு முழுவதும் ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அதிருப்தி அதிகமாகி உள்ளது. ஆகவே, தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்” என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் அய்யன் வள்ளுவனுக்கு அங்கீகாரம்