திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (பிப்.14) நடைபெற்றது.
இதில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், அலங்காநல்லூர், பாலமேடு, நத்தம், மணப்பாறை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600க்கும் மேட்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் 500 பேர் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர்.
காலை 8.00 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மதியம் 2.00 மணி வரை நடந்தது. இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருந்தபோது, திண்டுக்கல் வெள்ளோடு பகுதி கல்லுபட்டியைச் சேர்ந்த பெலிக்ஸ் என்பவரது மாடு வாடிவாசல் வழியாக வெளியேறி, மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடியது.
அப்போது எதிர்பாராத விதமாக தனியார் தோட்டத்து மொட்டை கேணியில் விழுந்தது. இதில் ஜல்லிக்கட்டு காளை பரிதாபமாக உயிர் இழந்தது.
உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிணற்றில் விழுந்த காளையை கயிறு கட்டி மீட்டனர்.
அதற்குள் காளை உயிரிழந்துவிட்டது. இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி பாதியில் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் காளை மிதித்து மற்றொரு காளையின் உரிமையாளர் உயிரிழப்பு