ETV Bharat / state

“தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சயமாக வெற்றி பெறும்” - அண்ணாமலை! - தமிழக அரசு

BJP TN President Annamalai: தமிழகத்தில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

investors-meet-held-in-tn-will-surely-be-a-success-says-bjp annamalai
தருமபுரியில் அண்ணாமலை செய்தியளர் சந்திப்பு..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 10:24 PM IST

Updated : Jan 7, 2024, 10:52 PM IST

“தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சயமாக வெற்றி பெறும்” - அண்ணாமலை!

தருமபுரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் தலைப்பில் பாதயாத்திரைக்காக 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி 3 சட்டமன்றத் தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ள இன்று அண்ணாமலை வருகை தந்தார்.

அங்கு அவர், பாப்பாரப்பட்டி உள்ள சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து இரண்டு நிமிடம் அண்ணாமலை தியானம் செய்தார். பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தியாகி சுப்பிரமணிய சிவா பாரத மாதா கோயில் கட்டுவதற்கு 6 ஏக்கர் நிலத்தினை ரூ.500க்கு வாங்கியுள்ளனர்

பாரத மாதா என்றால், திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்குக் கெட்ட வார்த்தையாகத் தெரிகிறது. காவி உடையில் இருக்கும் தாய் தான் பாரத மாதா. இதை அபிந்திராநாத் தாகூர் தான் இந்தியா முழுவதும் பாரத மாதா புகைப்படத்தை வெளியிட்டார். இதனைத் தான் சுப்பிரமணி சிவா இங்கு ஆலயத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று கனவு கண்டார்.

தொழு நோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி சிவா பாரத மாதா ஆலயத்திற்கு நினைவு ஆலயம் என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்களுக்கு இந்த வரலாறு தெரியவில்லை. அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தியாகி சுப்பிரமணி சிவா கனவு நினைவாகவில்லை. இதனால் சுப்பிரமணி சிவா இன்னும் மோட்சம் அடையாமல் இருக்கிறார்.

இந்த இடத்தில் மத்திய அரசு சார்பில் நாங்கள் கோயில் கட்டிக் கொடுக்கிறோம். இதைத் தமிழக அரசே, அரசு சொத்தாகப் பராமரிக்கட்டும். இதில் பாஜக எந்த பெயரும் வேண்டாம். பொங்கல் பரிசு தொகுப்பில் வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது.

அதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை இந்த ஆட்சி பொறுத்த வரையில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரிப்பது தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொருத்துவாரைப் பொங்கல் தொகுப்பை வருமான வரி கட்டுபவர்கள் என்று கட்டுப்பாடுகள் விதித்தால், இன்னும் 10 ஆண்டுகளில் எல்லா குடும்ப அட்டை தாரர்களும், வந்துவிடுவார்கள்.

மாநில அரசு இந்த போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். அறிவிப்பு செய்ததை, கட்டுப்பாடுகள் விதித்து நிராகரிப்பது, எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. கரும்பு வழங்கக் கூட கணக்கு பார்க்கிற ஆட்சி இது.
தமிழகத்தில் தற்போது நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களுள் 10 லட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அவ்வாறு வரவில்லை என்றால், நான் மிகுந்த ஏமாற்றம் அடைவேன். 1996-ம் ஆண்டிலிருந்து, தமிழ்நாட்டிற்குப் பாக்கி இருந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு எல்லா பாக்கியமும் கொடுக்க வேண்டும் என சொல்லி, காங்கிரஸ் ஆட்சிக் கால பாக்கியைக் கூட கொடுக்கச் சொன்னார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பவானி ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு..!

Last Updated : Jan 7, 2024, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.