தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொள்வதற்காக அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துவருகின்றனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவருகின்றனா். தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு திருப்பத்தூர், ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலிருந்து கரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சைக்காகவும், பரிசோதனைக்காகவும் வருகின்றனா்.
பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்துகொள்கின்றனா். சில நோயளிகள் இரண்டு மணிநேரம் காத்திருக்கும்போது மயக்கம் அடைந்தும்வருகின்றனா்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 27) ஒரு நோயாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டா் உதவியுடன் செயற்கைச் சுவாசம் அளித்து சிகிச்சைக்கு அனுமதித்தனா்.