தர்மபுரி: கர்நாடக அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு கடந்த இரு நாள்களுக்குமுன் அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்குவரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று (ஆக. 9) காலை ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து 7,500 கன அடியாக இருந்தது. ஆனால், இன்று (ஆக.10) நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைக்குவரும் நீர் குறைந்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5,537 கனஅடி நீரும், கபினி அணையிலிருந்து ஒன்பதாயிரம் கனஅடி நீரும் என 14 மொத்தம் 1,531 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஐவர், பவானி, சீனி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதையும் படிங்க: 'கோயில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?... அமைச்சர் விளக்கம்'