காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிகோட்டை வனப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதையடுத்து இன்று (நவ. 5) காலை நிலவரப்படி 3 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்து, 8 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
நீர்வரத்து உயர்வு காரணமாக, ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட வாழைப் பழங்கள் பறிமுதல்