கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, நுகு ஆகிய அணைகள் நிரம்பி காணப்படுகின்றது. எனவே, அணையின் பாதுகாப்புக் கருதி, காவிரி ஆற்றுக்கு, கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீரானது திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நீரானது இன்று (09.08.20) ஒகேனக்கலுக்கு வந்தடைந்ததால், தற்போது ஒரு லட்சத்து 50ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. மேலும் நீர்வரத்து உயர்ந்ததன் காரணமாக ஒகேனக்கல் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பவனி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே, ஒகேனக்கல் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவிரியில் வெள்ளப்பெருக்கு: அடித்துவரப்பட்ட முதலையால் மக்கள் பீதி