வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கர்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகள், கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் நேற்று (அக்.25) முதல் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நேற்று (அக்.25) மூன்றாயிரத்து 316 கனஅடி நீர் கபினி அணையிலிருந்து ஏழாயிரத்து 42 கன அடி நீர் என, 10 ஆயிரத்து 358 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக திடிரென அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மழையினால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்வு!