கர்நாடக மாநிலத்தில், கடந்த இரண்டு வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றது.
இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து, கடந்த 2 தினங்களாக படிப்படியாக அதிகரித்துவருகின்றது. நேற்று (ஜூலை.17) காலை நிலவரப்படி நீர்வரத்து ஐந்தாயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஜூலை.18) 5 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து உயர்வால், ஐவர்பவனி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.