ETV Bharat / state

Hogenakkal: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை.. ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிப்பு! - Salem

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 3, 2023, 11:42 AM IST

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கடந்த 10 நாட்களாக விநாடிக்கு 300 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.நேற்று முன் தினம் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி அதிகரித்து விநாடிக்கு 1000 கன அடியாக உயர்ந்தது.

தொடர் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து, இன்று காலை வினாடிக்கு 4000 கன அடியாக உயர்ந்துள்ளது‌‌. கடந்த 4 மாதமாக விநாடிக்கு 1000 கன அடிக்கு கீழ் குறைந்த அளவே நீர்வரத்து இருந்து வந்த நிலையில், தற்பொழுது தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோடை கால சீசனை கொண்டாட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் என்பதால், ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை நிலவரம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சேலம் மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 101.30 அடி நீர் இருந்துள்ளது. அணையில் 66.53 டிஎம்சி நீர் இருப்பு இருந்துள்ளது. வினாடிக்கு 1,075 கன அடியாக இருந்த நீர்வரத்து 3,980 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவேரி ஆற்றில் 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஆருத்ரா, ஏ.ஆர்.டி பாணியில் 'பிராவிடன்ஸ் டிரேடிங்' மோசடி.. 2 ஆயிரம் கோடியை மீட்கக்கோரி முதலீட்டாளர்கள் கண்ணீர் மல்க புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.