ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் பருவநிலை மாறி, குளிர் காலம் தொடங்கும். இக்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக ஏற்படும். தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து, மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவுகள் காணப்படுகிறது. அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் ஆட்களும், வாகனங்களும் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் விளையாடியதை நினைவூட்டியது - காற்று மாசு குறித்து ஆஸி. வீரர்!
இதனால் சாலையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகன ஓட்டிகள் செலுத்துகின்றனர். இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
சில நாட்களாகவே, மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இச்சூழலில் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டு பொதுமக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.