ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; ஊட்டமலை பகுதியில் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஊட்டமலை பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

author img

By

Published : Aug 4, 2022, 11:25 AM IST

Updated : Aug 4, 2022, 12:38 PM IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; ஊட்டமலை பகுதியில் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; ஊட்டமலை பகுதியில் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் காவிரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. ஆலம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் அருகே வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என மத்திய ஜல் சக்தி துறை அறிவித்ததைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 85 ஆயிரம் கனஅடிக்கு மேல் திறக்கப்படுவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி ஆற்று பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் தீயணைப்பு துறை, காவல் துறை, வருவாய்த்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!

Last Updated : Aug 4, 2022, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.