தர்மபுரி: தர்மபுரியில் பாஜக கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளா் எச்.ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி நீக்கம் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில்,' 'ஜெய்பீம்' படத்தில் பார்வதி அம்மாள் பெயரை மாற்றியது உள்நோக்கம் கொண்டது. ராஜா கண்ணு, சந்துரு பெயர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளன. மற்ற பெயர்களை மட்டும் ஏன் மாற்றினார்கள்?
உண்மையான வில்லன் அந்தோணிசாமியின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்?
திராவிடக் கட்சிகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் 1922ஆம் ஆண்டு முதல் நேரடி தொடர்புள்ளதாக புத்தகத்தில் உள்ளன.
அதன் ஒரு பகுதியாகவே 'ஜெய்பீம்' திரைப்படத்தை பார்க்கிறேன். இத்திரைப்படமானது வன்னிய குல சத்திரியர்களுக்கும் பட்டியல் சமூக மக்களுக்கும் மோதலை உருவாக்குகிறது.
இந்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது எனக் கூறி, மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியே 'ஜெய் பீம்' திரைப்படம். அந்தோணிசாமி பெயரை மாற்றியதும் தவறு. குருமூர்த்தி எனப் பெயர் வைத்ததும் தவறு.
இந்து அடையாளத்தை வைத்ததும் தவறு. மகாலட்சுமி படத்தை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த பரப்புரை தீவிரப்படுத்தப்படும்' என்றார்.
ஜெய்பீம் திரைப்படமானது மக்களை மதம் மாற்றும் முயற்சி என எச்.ராஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஜெய் பீம்' படம் பார்த்து சூர்யாவை வாழ்த்திய நல்லகண்ணு!