ETV Bharat / state

ஒரே ஆடு ரூ.30 ஆயிரம்; ரூ.2 கோடி வரை விற்பனையான ஆடுகள்... தருமபுரியில் அமோகம்!

தருமபுரி நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

ஒரே ஆடு ரூ.30 ஆயிரம்; ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. தருமபுரியில் அமோகம்!

author img

By

Published : Jan 10, 2023, 3:24 PM IST

ஒரே ஆடு ரூ.30 ஆயிரம்; ரூ.2 கோடி வரை விற்பனையான ஆடுகள்... தருமபுரியில் அமோகம்!

தருமபுரி: புகழ்பெற்ற நல்லம்பள்ளி வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக இன்று (ஜன.10)ஆடுகளை விற்பனை செய்ய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். தருமபுரி மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் குலதெய்வ வழிபாட்டில் ஆடுகளை பலியிட்டு வழிபடுவது வழக்கம். பண்டிகை கொண்டாடுவற்காக சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.

மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தொப்பூர், பாப்பாரப்பட்டி, மிட்டாரரெட்டிஹள்ளி, ஜருகு உள்ளிட்டப்பகுதியில் இருந்தும்; சேலம் மாவட்டம், மேச்சேரி,மேட்டூர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்தும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தன. இதன் காரணமாக காலை முதலே ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ஒரு ஆடு சுமார் ரூ. 4000 முதல் ரூ.30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட இன்று(ஜன.10) ஆடுகளின் விலை ரூ.500 முதல் 1000 வரை விலை உயர்ந்து விற்பனையானது. தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் 35 கிலோ எடையுள்ள ஆடு ஒன்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். இதன் விலை 30 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்திருந்தார். இன்று சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகளிலேயே மிகப்பெரியதும் 35 கிலோ எடை அதிகமானதுமான ஆடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வாரச் சந்தையில் 2 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.