ETV Bharat / state

பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை! - tn news

பக்ரீத் பண்டிகையினையொட்டி, நல்லம்பள்ளிச் சந்தையில் ஒரு கோடி ரூபாய் அளவிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

author img

By

Published : Jun 27, 2023, 3:38 PM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

தருமபுரி : நல்லம்பள்ளியில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (ஜூன் 29) இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக ஆடுகள் அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

தருமபுரி மாவட்டம் - நல்லம்பள்ளி,தொப்பூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்டப் பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டம் - மேச்சேரி, ஓமலூர்,மேட்டூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து விவசாயிகள் தங்கள் ஆடுகளை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் 600 செம்மறி ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், இஸ்லாமியர்கள் அதிக அளவு செம்மறி ஆடுகளை விரும்பி வாங்கிச் சென்றனர் . ஒரு செம்மறியாடின் விலை 6 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 38 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளாடுகள் சென்ற வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகி உள்ளது.

இதையும் படிங்க: பழக்கடையில் பழம் வாங்க சென்ற பாடிபில்டர்களால் கைகலப்பு; போலீசார் விசாரணை

தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் விவசாயிகள் ஆடுகளை வளர்ப்பதற்காக ஆட்டு குட்டிகளை வாங்கிச் சென்றனர். ஆட்டுக்குட்டிகள் 3500 முதல் 4500 ரூபாய் வரை விற்பனையானது. ஆடுகள் வரத்துக் குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று நல்லம்பள்ளி சந்தையில் மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பல ஊர்களில் இருந்து ஆடு வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். ஆடு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கூறுகையில், ஆடுகளின் விலை சற்று உயர்ந்து உள்ளதாகவும் நிறைய இடங்களில் இருந்து ஆடுகள் வந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும், நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் மட்டும் இன்று சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல சந்தைகளில் வழக்கத்தைக் காட்டிலும் ஆடுகளின் விற்பனை அதிகரித்து உள்ளது. குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி; ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.