ETV Bharat / state

தருமபுரியில் விவசாயம் செழிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ஜி.கே.மணி - GK Mani Requested to TN Govt

தருமபுரியில் விவசாயம் செழிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக கௌரவதலைவரும் பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

ஜி.கே.மணி கோரிக்கை
ஜி.கே.மணி கோரிக்கை
author img

By

Published : Dec 20, 2022, 1:18 PM IST

Updated : Dec 20, 2022, 4:03 PM IST

தர்மபுரி: இதுகுறித்து பாமக கௌரவதலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டம் பாலவாடி ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது. இது போல மாவட்டத்தில் உள்ள எல்லா ஏரிகளும் நிரம்பி வறட்சியை போக்கவும், வளர்ச்சியைப் பெருக்கவும் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பென்னாகரம் தொகுதியில் இதற்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்த போது, பாலவாடி உள்ளிட்ட 18 ஏரிகளை இணைக்கும் கால்வாய் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் பேசி, நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தது. அதற்குப் பின் கிடப்பிலே இருந்த திட்டம் தற்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டு, மழை பெய்ததால் எல்லா ஏரிகளும் நிரம்பியுள்ளது.

தற்போது பென்னாகரம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பின் புலிக்கரை ஏரி உள்ளிட்ட 14 ஏரிகளை இணைக்கும் திட்டம் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் எல்லா ஏரிகளும் நிரப்பப்படும். தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்த வறட்சியான மானாவாரி பயிரையே நம்பி வாழும், இம்மாவட்டத்தின் விவசாயம் செழிக்க மற்றும் உணவு உற்பத்தி பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி ஒகேனக்கலில் இருந்து வரும் உபரி நீர் மூலம் கெண்டையன் கோட்டை ஏரி நிரம்பி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளை நிரப்பும் தர்மபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிரப்பி வறட்சியை போக்க வளர்ச்சியை பெருக்க நிரந்தர தீர்வு காணவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்றம் மீது அச்சம்.. பிரச்னைகளோடு வாழப் பழகும் மக்கள் - நீதிபதி பேச்சு

Last Updated : Dec 20, 2022, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.