தருமபுரி: சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 96 ஆவது நினைவு தினம் இன்று (ஜூலை 23) அனுசரிக்கப்பட்டது. வ.உ.சிதம்பரனாரின் நண்பா் சுப்பிரமணிய சிவா சுதந்தர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தொழுநோய் ஏற்பட்டு விடுதலையானார்.
பின்னர் பாரத மாத கோயில் அமைக்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தனது இறுதி காலத்தை தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வாழ்ந்து 1925 ஆம் ஆண்டு மறைந்தார். அங்கு அவரின் நினைவாக தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைத்தது.
மலர் மரியாதை
இன்று அவரது நினைவிடத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் பாலக்கோடு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மேலும் சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாரதமாதா ஆலயத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: ஆடி பௌர்ணமி- வழிபாடும் மகிமையும்!