யுகாதி பண்டிகையை முன்னிட்டு தருமபுரியிலிருந்து ஆந்திரா, கேரளா பகுதிக்கு பல்வேறு வகையான பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளதால், அறுவடை செய்யப்பட்ட பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைக்கு ஏற்பட்டுள்ளது.
மல்லிகைப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களுக்கு கிராக்கி அதிகம் என்பதால் விற்பனையாகிவிட்டன. ஆனால் சாமந்திப்பூவை வாங்க யாரும் முன்வராத காரணத்தால், சுமார் மூன்று டன் அளவிலான சாமந்திப்பூ குப்பையில் கொட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை கடும் வீழ்ச்சி!