ETV Bharat / state

தருமபுரி ஆட்சியர் பங்களா பின்புறத்தில் பயங்கர தீ விபத்து! - தருமபுரி செய்திகள்

Dharmapuri Fire accident: தருமபுரி ஆட்சியர் குடியிருப்புக்கு பின்புறம் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

dharmapuri-plastic-products-factory fire
தருமபுரி தீ விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 8:26 AM IST

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு(நவ.26) பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரியத் தூங்கி உள்ளது.

இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும். தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.

மேலும், தீ விபத்து நிகழ்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி, லாரி பார்க்கிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் அங்கு தீ பரவாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் இதுவரை ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'ஆரோக்கிய மந்திர்' ஆகும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்..! திடீர் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.