தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி போட்டியிடுகிறார். இன்று பாப்பாரப்பட்டி கூட் ரோடு பகுதியில், தனியார் திருமண மண்டபத்தில், காரிமங்கலம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுக பாமக பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது, கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே செல்ல தொடங்கினர். அக்கூட்டம் முடிந்த பிறகு கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.பலர் முந்தியடித்துக்கொண்டு பிரியாணிகளை அள்ளிச் சென்றனர். சிலர் சண்டையிட்டும், சிக்கன் பிரியாணி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிக்கன் பிரியாணிக்கான சண்டை அரை மணி நேரம் வரை நீடித்தது.
இதையும் படிங்க: பேமஸாகும் குஷ்பு தோசை: பரப்பரையில் ருசிகரம்