ETV Bharat / state

தருமபுரியில் பயங்கரம்; சொத்து தகராறில் மகனை ஓட ஓட வெட்டிய தந்தை - பதறவைக்கும் சிசிடிவி காட்சி - மாற்று மதத்து பெண்

தருமபுரி அருகே மாற்று மதத்து பெண்ணை திருமணம் செய்த மகனை சொத்து தகராறு காரணமாக தந்தையே ஓட ஓட வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Father cuts son with sickle due to a property dispute in Dharmapuri
தருமபுரியில் சொத்து தகராறு காரணமாக மகனை, தந்தையே ஓட ஓட வெட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
author img

By

Published : Mar 27, 2023, 5:45 PM IST

தருமபுரியில் சொத்து தகராறு காரணமாக மகனை, தந்தையே ஓட ஓட வெட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

தருமபுரி: பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பிரகாஷ் (40). இவர் யாஷ்மின் (இஸ்லாம் மதம்) (35) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு தேவப்பிரியன் என்ற மகனும், பிரகல்யா 1 ½ வயதில் பெண்ணும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரகாசுக்கும் அவர் குடும்பத்திற்கும் மதம்மாறி திருமணம் செய்ததால் தொடர் பிரச்னை நீடித்து வந்துள்ளது. மேலும் பிரகாஷுக்கும் அவர் பெற்றோர்களுக்குமே சொத்து தொடர்பாக தகராறும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தனது வீட்டருகே இருந்த பிரகாஷை அவரது தாய், தந்தை குமரவேல் இருவரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாரத பிரகாஷ் உயிரைக் காப்பாற்றி கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றிருக்கிறார். அவரை விடாமல் விரட்டி துரத்திய பிரகாஷின் தந்தை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்று தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பிரகாஷ் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

வீச்சு அரிவாளுடன் பிரகாஷின் தந்தை அவரை துரத்தும் சிசிடிவி கட்சிகள் தற்போது வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த தாக்குதலில் கழுத்து, கால், கை பகுதியில் பலத்த வெட்டுக்காயம் பட்ட பிரகாஷ் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் பிரகாஷ் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஓட ஓட வெட்டிய தாய், தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பதற்காக பிரகாஷ் வந்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பிரகாஷின் புகார் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும்; உறுதி அளித்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாரு கூறி பிரகாஷை மீண்டும் மருத்துவமனைக்கே அனுப்பி வைத்தனர்.

மாற்று மதத்து பெண்ணை திருமணம் செய்த மகனை சொத்து தகராறு காரணமாக, பெற்ற தந்தையே ஓட ஓட வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த தாக்குதலில் தப்பிப் பிழைத்த மகன் புகார் அளிக்க ஆம்புலன்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: 'கைதிகள் பல்லை பிடுங்கும் பல்பீர் சிங்' - நெல்லையில் நடந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.