தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தொட்டம்பட்டி, நம்பிபட்டி ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் மைலன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.
கடந்த 6 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் மைலன் ஏரி வறண்டது. தற்போது மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பியது.
இந்நிலையில் தொட்டம்பட்டி விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரியின் கரைப்பகுதியில் ஆடு பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர்.
இதையும் படிங்க: தொடரும் கன மழை காரணமாக நிரம்பிய ஏரி - மகிழ்ச்சியில் விவசாயிகள்