தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிற்குள்பட்ட கோடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், பச்சையப்பன், ஆறுமுகம், வேல்முருகன், சின்னசாமி ஆகிய விவசாயிகள் 1989ஆம் ஆண்டு இலவச மின் இணைப்புக் கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.
இது தொடர்பாக 2010ஆம் ஆண்டு அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கலாம் என்பதற்கான நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய அலுவலக அலுவலர்களிடம் விவசாயிகள் கேட்டபோது, மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்திவந்தனர்.
பென்னாகரம் துணை மின் நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களை அலைக்கழித்து வருவதாகக் கூறி தருமபுரி மின்சார வாரிய பகிர்மான கழக அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்துவிட்டு விவசாயிகள், ஐந்துபேரும் கொட்டும் மழையில் இலவச மின் இணைப்பு வழங்கிடக்கோரி, தங்களது எதிர்ப்பினை தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனியும் தங்களுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கண்ணீர் வடித்தனர்.
இதையும் படிங்க: ஆயிரமாண்டுகள் பழமையான 'பதிமலை குகை' ஓவியங்களைப் பாதுகாக்க மக்கள் கோரிக்கை!