மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சீர்திருத்த சட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பயன்படுத்தி வரும் இலவச மின்சாரம் ரத்து செய்வதை கைவிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், வெற்றிலை, பூக்கள் போன்ற பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து கடன் சுமையில் உள்ளனர்.
நீதிமன்ற அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு முழுமையாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.