தருமபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள மாதேமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குமார். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்திருந்தார். மஞ்சள் அறுவடைக்காக நிலத்தை உழுதபோது நிலத்தில் சிலை ஒன்றைக் கண்டறிந்தார்.
உடனடியாக இது குறித்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் சரவணனுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் சிலையை மீட்டு பரிசோதனைக்காக தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனையில் அது 20 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை என்பது தெரியவந்தது. மேலும், இதனை திருமேனி காப்பகத்தில் ஒப்படைப்பதற்காக, வருவாய்த் துறையினர் பாதுகாப்போடு நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரித்து வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோப்புக்கட்டியில் மினியேச்சர் சிலை செய்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்!