தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சோமனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவருடைய விளைநிலம் வழியாக உயர்மின்னழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் தனக்கு உரிய இழப்பீடு கொடுக்காமல் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த விவசாயி, அங்கு இருந்த உயர்மின் கோபுரம் ஒன்றில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சின்னசாமியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த விவசாயி சின்னச்சாமி உரிய இழப்பீடு வழங்காமல் மின் கோபுரங்களைத் தன்னுடைய விளைநிலம் வழியாகக் கொண்டுசெல்லக் கூடாது எனக் கூறினார்.
அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து உயர்மின்னழுத்த மின் கோபுரத்திலிருந்து இறங்கிய சின்னசாமி, இழப்பீடு வழங்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!