ETV Bharat / state

ஏழு மணி நேரம் போராடி யானையை மீட்ட வனத்துறையினர் - elephant saved from well near karimangalam

தருமபுரி: காரிமங்கலம் அருகே விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானையை ஏழு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

elephant saved from well near karimangalam

author img

By

Published : Mar 14, 2020, 12:21 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பென்னாகரம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கோடை காலம் தொடங்கியதால் காடுகளில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலப்பகுதியை நோக்கி வெளியேறியுள்ளன.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் காரிமங்கலம் முக்குளம், காட்டு சிகரல அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்தன.

இந்நிலையில் நேற்று இரவு ஆண் யானை ஒன்று காட்டு சிகரல அள்ளி பகுதியில் தண்ணீா் தேடிவந்துள்ளது. அப்போது தண்ணீர் இல்லாத வறண்ட விவசாய கிணறு ஒன்றில் தவறி விழுந்தது.

யானையை மீட்ட வனத்துறையினர்

யானை கிணற்றில் இருந்து பீறிட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாலக்கோடு பகுதி வன அலுவலா்கள் இரவு 10 மணியிலிருந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏழு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் இரண்டு ராட்சத வாகனங்களின் மூலம் விவசாய கிணற்றுக்கு சாய்தள வழிப்பாதை அமைத்து யானையை மீட்டு காட்டிற்குள் விட்டனர்.

இதையும் படிங்க... வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த எட்டு பேருக்கு பேருக்கு கொரோனா அறிகுறி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.