ETV Bharat / state

தர்மபுரியில் தயாராகும் மின் வாகனம்: 2 மணி நேரம் சார்ஜ்... 80 கி.மீ. பயணம் - electric bike

தர்மபுரி: இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 கி.மீ பயணம் செய்யும் மின் வாகனத்தை தர்மபுரி இளைஞர்கள் தயாரித்துள்ளனர்.

இ.மென் மின் இருசக்கர வாகனம்  மின் இருசக்கர வாகனம்  தர்மபுரியில் தயாராகும் மின் இருசக்கர வாகனம்  E. Man electric bike  electric bike  Electric vehicle ready in Dharmapuri 2 hours charging 80 km Travel
E. Man electric bike
author img

By

Published : Mar 10, 2021, 7:46 PM IST

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து இ.மென் என்ற மின்சார இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இது குறித்து இ.மென் நிறுவனத்தினர் கூறுகையில்,"இந்த இருசக்கர வாகனத்தை இரண்டரை மணிநேரம் சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். சார்ஜ் தீர்ந்தால் கூட ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.54 ஆயிரம் முதல் ரூ.74 ஆயிரம் வரை இரண்டு மாடல்களில் இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தக்கூடிய உதிரிபாகங்கள் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.

இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 கி.மீ பயணம் செய்யும் மின் இருசக்கர வாகனம்

தர்மபுரியில் அமைய உள்ள புதிய சிப்காட் வளாகத்தில் பேட்டரி தயாரிப்பு, உதிரி பாகங்கள் தயாரிக்க விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் வாகனங்களுக்கு தயாரிக்க தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பு தொடங்கும். இதன் மூலம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மூன்று பலன்களுடன் வடிவமைக்கப்பட்ட சோலார் மிதிவண்டி! கல்லூரி மாணவர் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.