ETV Bharat / state

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனை கூட்டம்

தருமபுரி: மே 23ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை,19ஆம் தேதி நடைபெற உள்ள மறுவாக்குப்பதிவு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : May 11, 2019, 3:48 PM IST

தருமபுரி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற 23ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றுக்கு 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடன் அட்சியர் மலர்விழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மறுவாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகள், வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள், உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மற்றும் 19ம் தேதி நடைபெற உள்ள மறு வாக்குப்பதிவு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.      தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   19ஆம் தேதி  எட்டு வாக்குச்சாவடிகளில் நடைபெறும் மறுவாக்குப்பதிவு மற்றும் 23ம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மலர்விழி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி .அரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் என்ன பட உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வேட்பாளர்கள் தங்கள் முகவர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும். என்றும் இதுவரை 9200 தபால் வாக்குகள் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மலர்விழியை தெரிவித்துள்ளார். மேலும் இம்மாதம் 19ம் தேதி பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் மேலும் நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்த பட  உள்ளனர் வாக்குப்பதிவு முழுவதும் வெப் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் கைபேசி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது .வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும்  வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹ்மதுல்லாஹ்கான். முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவனருள். பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற இடைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.