தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு என மூன்று மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. மூன்று மலைக் கிராமங்களுக்கும் சாலை, போக்குவரத்து வசதி இல்லை.
இங்குள்ள மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை பாலக்கோடு பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர். மலைப்பகுதி என்பதால் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாததால் கழுதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஏரிமலை, கோட்டூர் மலைப் பகுதியில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இம்மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா, வாக்குப் பெட்டிகளை கழுதைகள் மூலம் எடுத்துச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா என்பதை அறிய மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் (பொறுப்பு) தேன்மொழி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கோட்டூர் மலையில் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமாகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!