தருமபுரி மாவட்டம், பாலக்கோடு திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவருக்கு பிரவீன்(15), கோகுல் (14) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தருமபுரி தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை (Dharmapuri Thadangam Jallikattu 2023) பார்ப்பதற்கு தங்களது மாமாவான ஹரி என்பவருடன் இன்று (ஜன.21) சென்றுள்ளனர். அப்போது காளைகள் வெளியேறும் இடத்தில் நின்றுகொண்டிருந்த கோகுலை காளை ஒன்று முட்டியது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் கோகுல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உயிரிழந்த சிறுவன் கோகுலின் கண்களை தானம் அளிக்க சிறுவனின் பெற்றோர் சம்மதித்த நிலையில், கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கே.வி. குப்பம் அருகே மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு