தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர் கனிமொழி என்பவர் நேற்று செவிலியர் ஒருவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல் அடைந்த செவிலியா் இன்று பணிக்கு வரவில்லை. இந்நிலையில், செவிலியரை அடித்த மருத்துவரை கண்டித்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்காமல் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.
அப்போது, செவிலியரை தாக்கிய மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், செவிலியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணி புறக்கணிப்பு செய்தனர். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
இதையும் பார்க்க: 'ஊரடங்கு தொடர்ந்தால் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும்'