ETV Bharat / state

நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து - எல் அண்ட் டி ஊழியர்களுடன் திமுக எம்.பி. ஆய்வு!

தருமபுரி: சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அடுத்த குண்டலபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை நெடுஞ்சாலையை பராமரித்துவரும் எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களுடன் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

author img

By

Published : Sep 20, 2019, 3:01 PM IST

செந்தில்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், குண்டலபட்டி, பாளையம்புதூர், தொப்பூர் ஆகிய இடங்களில் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தால் உயிரிழக்கின்றனர்.

இந்த இடங்களில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் கிருஷ்ணகிரி முதல் தொப்பூர்வரை பாரத் மாலா திட்டத்தில் இந்தச் சாலை எட்டு வழிச்சாலையாக அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த நான்கு இடங்களிலும், ஆறு வழி மேம்பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொப்பூர்-பவானி செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்தச் சாலை மாநில நெடுஞ்சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தொப்பூர்-பவானி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.

செந்தில் குமார் ஆலோசனை

தற்பொழுது எல்லா இடங்களிலும் சாலை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளும்போது சாலையோரம் இருக்கின்ற மரங்கள் வெட்டப்படுகின்றன. அதுபோல் மீண்டும் சாலையோரங்களில் மரங்களை வளர்க்கும்பொழுது மீண்டும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படுகின்றன. இதற்கு மாற்று ஏற்பாடாக சாலையின் நடுவே பூங்காக்கள் அமைக்கப்படும் இடங்களில் 10 அடி தூரத்திற்கு ஒரு மரம் என நட்டால் சாலைகளில் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டு வளர்க்க முடியும்.

இது குறித்து எல் அண்ட் டி அலுவலர்களிடம் விரிவான விவரங்களைக் கேட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சாலையின் நடுவே லட்சக்கணக்கான மரங்கள் நடுவது குறித்து பேசவுள்ளேன்.

அதேபோல் சாலையின் நடுவே பாதிப்பில்லாமல் எந்த வகையான மரங்கள் நடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களுடனும் கலந்தாலோசித்து, நெடுஞ்சாலைகளின் நடுவே மரங்கள் நடும் பணி, முதன்முதலில் தருமபுரியிலிருந்து தொடங்கப்படும்” என்றார்.

Intro:tn_dpi_01_dmk_mp_road_visit_vis_7204444

Body:tn_dpi_01_dmk_mp_road_visit_vis_7204444

Conclusion:

தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்கள் வளர்க்க உள்ள சாத்தியங்கள் பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் ஆலோசனை.

சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி அடுத்த குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை நெடுஞ்சாலை பராமரித்து வரும் எல்என்டி நிறுவன ஊழியர்களுடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  டிஎன்வி.எஸ்.செந்தில்குமார்   ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,

 தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், குண்டலபட்டி, பாளையம்புதூர், தொப்பூர்  ஆகிய  இடங்களில் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றனர். இந்த இடங்களில் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இன்னும் ஓராண்டிற்குள் கிருஷ்ணகிரி முதல் தொப்பூர் வரை பாரத் மாலா திட்டத்தில் இந்த சாலை 8 வழி சாலையாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த நான்கு இடங்களிலும், ஆறு வழி மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. மேலும்

தொப்பூர்-பவானி செல்லும் சாலையை நான்கு வழி சாலையாக அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த சாலை மாநில நெடுஞ்சாலையில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விரைவில் தொப்பூர்-பவானி சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்படும். தற்பொழுது எல்லா இடங்களிலும் சாலை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளும் பொழுது சாலையோரம் இருக்கின்ற மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.   அதுபோல் மீண்டும் சாலையோரங்களில் மரங்கள் வளர்க்கும் பொழுது மீண்டும் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்படுகிறது.  இதற்கு மாற்று ஏற்பாடாக சாலையின் நடுவே பூங்காக்கள் அமைக்கப்படும் இடங்களில் 10 அடி  தூரத்திற்கு ஒரு மரம் என நட்டால் சாலைகளில் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டு வளர்க்க முடியும். இதுகுறித்து எல்என்டி அலுவலர்களிடம் விரிவான விவரங்களை கேட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் மத்திய தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து சாலையில் நடுவே லட்சக்கணக்கான மரங்கள் நட்டு  வளர்ப்பது குறித்து பேச உள்ளேன். அதேபோல் சாலையின் நடுவே பாதிப்பில்லாமல் எந்த வகையான மரங்கள் நடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, நெடுஞ்சாலைகளில் சாலையின் நடுவே மரங்கள் நடும் பணியை, முதன்முதலில் தருமபுரியில் இருந்து தொடங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.