ETV Bharat / state

’ஆட்சி மாறினால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலாத்தளம்’ - திமுக எம்பி. உறுதி - சுற்றுலாத்தளம் ஒகேனக்கலில் ஆய்வு

தருமபுரி: ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

dmk_mp_senthilkumar_hoganakkal
தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் ஒகேனக்கல்லில் ஆய்வு
author img

By

Published : Oct 19, 2020, 7:42 PM IST

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் கடந்த 8 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாவை நம்பி உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர்.

இது குறித்து அறிந்த தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் இன்று ஒகேனக்கல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு சமைப்பவர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, கர்நாடக மாநிலப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அம்மாநில அரசு அனுமதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனுமதி அளிக்காதது குறித்து மக்கள் முறையிட்டனர்.

இது குறித்து எம்.பி. செந்தில்குமார் பேசியதாவது:

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் பகுதியை மேம்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதை நம்பி இரண்டாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதமாக எந்தவித உதவியும் செய்யவில்லை.

முதல் மாதம் மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கி மீதமுள்ள 7 மாதங்கள் இவர்களை கண்டு கொள்ளவில்லை. இவர்களின் வாழ்வாதாரம் குறித்த குறையை கூட கேட்க யாரும் வரவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது 50 கிலோ அரிசி வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெறும் அரிசியை வைத்துக்கொண்டு எப்படி இவர்களால் வாழ்க்கை நடத்த முடியும். குடிநீருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதியில் ஒரு கரையில் தமிழ்நாட்டின் பகுதியாகவும் அடுத்த கரையில் கர்நாடக பகுதியாகவும் உள்ளது.

கர்நாடக பகுதியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிகளில் குளிக்க கடந்த 15ஆம் தேதி அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை அனுமதி வழங்கவில்லை.

மாவட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறை வகுத்து அனுமதி வழங்கினால் நெறிமுறைகளைப் பின்பற்ற இப்பகுதி வியாபாரிகள் தயாராக உள்ளனர். தொழிலாளர்களின் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் தீர்த்துவைக்க வேண்டும்”என்றார்.

ஒகேனக்கல் பகுதியில் சர்வதேச அளவிலான நீச்சல் குளம் அமைக்க நாடாளுமன்றத்தில் தான் பேசியதாகத் தெரிவித்த அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இங்குள்ள குழந்தைகள் பெரிய பாறைகளில் இருந்து குதித்து பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

தருமபுரி எம்.பி. செந்தில்குமார் ஒகேனக்கல்லில் ஆய்வு

இந்தப் பகுதியை மேம்படுத்த தற்போது ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதாக இல்லை. ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்மூலம் சுற்றுலாத் தளத்தில் முதலீடு அதிகரித்ததால் இங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க:ஒகேனக்கல், பிலிகுண்டுலு பகுதிகளில் ஐஏஎஸ் அலுவலர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.