ETV Bharat / state

மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் - திமுக எம்.பி செந்தில்குமார் ! - morapur train issue

தருமபுரி :  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மக்களவையில்  பேசினார்.

dmk mp parliament speech
dmk mp parliament speech
author img

By

Published : Dec 4, 2019, 9:24 PM IST

மக்களவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு நிதியில் ஊரக மற்றும் கிராமப் புறங்களுக்கு செயல்படுத்தும் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகளில் 10 விழுக்காடுகூட மக்கள் பயன்படுத்துவதில்லை. அரசு கழிப்பறை கட்ட 12,000 ரூபாய் வழங்குகிறது. இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகள் தற்போது பயன்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் உள்ளன. கழிப்பறைகள் கட்டப்பட்டு ஓர் ஆண்டுகளில் பெய்த சாதாரண மழையைகூட தாக்கு பிடிக்காத அளவில்தான் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுள்ளன எனக் கூறினார்.

தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார்

தொடர்ந்து பேசிய அவர், நிதியமைச்சர் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தேர்தல் நேரத்தில் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு 358 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சில லட்சம் தொகை மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. முழு தொகையும் ஒதுக்கீடு செய்து மொரப்பூர் தருமபுரி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பேசினார்.

இதையும் படிங்க:

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை: தருமபுரி ஆட்சியர் மலர்விழிக்கு குடியரசு துணைத் தலைவர் விருது!

Intro:தருமபுரியில் மத்திய அரசு நிதியில் கட்டப்பட்ட கழிப்பறையில் முறைகேடு நடந்துள்ளது .தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் மக்களவையில்தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேச்சு. Body:தருமபுரியில் மத்திய அரசு நிதியில் கட்டப்பட்ட கழிப்பறையில் முறைகேடு நடந்துள்ளது .தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் மக்களவையில்தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேச்சு. Conclusion:தருமபுரியில் மத்திய அரசு நிதியில் கட்டப்பட்ட கழிப்பறையில் முறைகேடு நடந்துள்ளது .தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் மக்களவையில்தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேச்சு. மக்களவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். மத்திய அரசு நிதியில் ஊரக மற்றும் கிராமப் புறங்களுக்கு செயல்படுத்தும் நிதியில் முறைகேடு நடந்துள்ளது. கிராமப்புறங்களில் மிகவும் ஏழை எளிய மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்றல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகளில் 10% கூட மக்கள் பயன்படுத்துவதில்லை. இத்திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது. இதனை தன்னால் நிரூபிக்க முடியும். அரசு கழிப்பறை கட்ட 12,000 ரூபாய் வழங்குகிறது.இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகள் தற்போது பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் தான் உள்ளது. கழிப்பறைகள் கட்டப்பட்டு ஓர் ஆண்டுகளில் பெய்த சாதாரண மழையை கூட தாக்கி பிடிக்காத அளவில்தான் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு செலவு செய்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட ஒரு தொகுதிக்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. நிதியமைச்சர் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேர்தல் நேரத்தில் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு 358 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.சில லட்சம் தொகை மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று உள்ளது. முழு தொகையும் ஒதுக்கீடு செய்து மொரப்பூர் தருமபுரி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அதற்கான நிதியை மத்திய நிதியமைச்சர்ஒதுக்கீடு செய்து தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்மருத்துவர் செந்தில்குமார் பேசினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.