தருமபுரி மாவட்டம் அரூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சித் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
அமைச்சா் கே.பி. அன்பழகன் முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அமைச்சர் அனைவருக்கும் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார்.