நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்கறி சந்தைகளை மக்கள் வசதிக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைப்பதும் என பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதன்படி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் வகையில், சந்தையின் நுழைவு வாயிலில் இன்று முதல் கிருமி நாசினி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!