நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதனையடுத்து பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்கறி சந்தைகளை மக்கள் வசதிக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துவருகிறது.
அதன்படி தற்காலிக காய்கறி சந்தை, வாகனங்கள் மூலம் வீட்டிற்கு அருகிலேயே காய்கறி விற்பனை உள்ளிட்ட பல வழிமுறைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை கொண்டுசேர்கின்றனர்.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்தைக்கு வரும் மக்களுக்கு கரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிக காய்கறி சந்தைக்கு வரும் மக்கள் இந்தப் பாதை வழியாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க...தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!