ETV Bharat / state

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியர்களுக்கு திண்டுக்கல் ஐ லியோனி பதிலடி! - கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு பதிலடி கொடுத்த லியோனி

Dindigul I Leoni: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரியில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திண்டுக்கல் லியோனி, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தருமபுரி பொதுகூட்டத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு பதிலடி கொடுத்த லியோனி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 5:54 PM IST

தருமபுரி பொதுகூட்டத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு பதிலடி கொடுத்த லியோனி

தருமபுரி: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தருமபுரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைமை கழக கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக வாரிய தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது "உலக வரலாற்றிலேயே யாருக்கும் கிடைக்காத சிறப்பிடம் பெற்றவருக்கு தான் தமிழகம் முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறோம். காரணம் பன்முகத் தன்மை கொண்ட அவர் மற்றும் அவரின் பேச்சு கவிதை நயத்துடன் இருக்கும். கடந்த காலத்தில் திரைப்படத்தில் வெறும் பாடல்கள் மட்டுமே இருந்த நிலையில், என்று பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் திரைப்படத் துறைக்குக் காலடி வைத்தார்களோ, அன்று அவர்கள் எழுதிய கதைகளும் கவிதைகளும் தான் தமிழ் சமுதாயத்தைத் தலைதூக்க வழிவகுத்தது" என்றார்.

மேலும், "அதே போல் திரை உலகில் நடிகர்கள் முதல் இயக்குநர்கள் வரை அவர்கள் தயாரித்த படங்கள் திரையில் காண்பிக்கும் போது எழாத கரகொலி, தானை தலைவர் கலைஞர் திரை, கதை, வசனம் என்று திரையில் காண்பிக்கும் போது மட்டும் தான் கரகொலி விண்ணைப் பிளக்கும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "என்.டி.ஏ என்ற அமாவாசை கூட்டணியை நாட்டை விட்டுத் துரத்தி, இந்தியா என்ற கூட்டணியை ஒருங்கிணைத்து, நாட்டின் புதிய மதச்சார்பற்ற சக்தி மற்றும் இந்தியாவுக்குத் தலைமை உருவாக்குகின்ற ஆக்கப்பூர்வமான திறன் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலினுக்குத் தான் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் என் புகைப்படத்திற்கு மாலையைப் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கிறார்கள். அவர்களால் இதை மட்டும் தான் செய்ய முடியும். பெரியார் முகத்திற்கு பெயிண்ட் அடிக்க முடியும் அல்லது அம்பேத்கர் சிலைக்குக் காவி சாயம் பூச முடியும். பெரியார்களின் கொள்கைகளையும், அம்பேத்கரின் கொள்கைகளையும் தொடர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். மத வெறியும், ஜாதி வெறியும் இந்த நாட்டை விட்டு விரட்டும் வரை லியோனி ஓய மாட்டான்.

எத்தனை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினாலும் மீண்டும் உயிர்த்தெழுகின்ற கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகின்ற கட்சி. அருகம்புல் போல ஆல மரத்தைப் போல பத்து முறை வெட்டினாலும் மீண்டும் துளித்து எழுகின்ற கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். இது போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளுக்கு திமுக தொண்டன் ஒருபோதும் அஞ்ச மாட்டான்" என்றார்.

இதையும் படிங்க: Thirumavalavan: சிறுபான்மையினர் மீது வெறுப்பு அரசியலை விதைக்கிறது பாஜக :திருமாவளவன் குற்றசாட்டு !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.